புதன், 17 அக்டோபர், 2012

ஒரு எளிய உறக்கமுண்டாக்கி -ரிலாக்ஸ் tea

  • ஒரு எளிய உறக்கமுண்டாக்கி -ரிலாக்ஸ்  டீ                                                  கொஞ்சம் கசகசா (ஒரு தேக்கரண்டி )எடுத்து கொள்ளுங்கள் ,அப்படியே ஒரு துண்டு தோல் சீவிய சுக்கு எடுத்துக் கொள்ளுங்கள் ,சுக்கை தட்டிக் கொண்டு ,கசகசாவையும் ,சுக்கையும் கலந்து ஒரு பாத்திரத்தில் இட்டு ,நான்கு டம்ளர் சுத்தமான தண்ணீர் ஊற்றுங்கள் ,அடுப்பை பற்ற வைத்து ,பாத்திரத்தை அடுப்பேற்றுங்கள் ,நன்கு கொதிக்க வைத்து , நான்கில்  ஒரு பங்காக ,வற்ற வைத்த கசாயத்தை ,ஒரு சுத்தமான துணியில் வடிகட்டுங்கள் ,தேவைக்கு ஏற்ப ,கொஞ்சம்  பனங் கல்கண்டு சேர்த்து ,இரவில் படுக்கைக்கு செல்ல அரை மணி முன்பு ,இளஞ் சூடான டீயை  ரசித்து குடியுங்கள் ,மனதிற்கு இனிய ராகமுள்ள பாடல்களை கேளுங்கள் ,இனிமையான கனவுகளுடன் கூடிய ஆழ்ந்த உறக்கம் உங்கள் வசப் படும் ,தூக்கமின்மை நோயால் அவதி படுபவர்களுக்கு ஒரு வர  பிரசாதம் ,வயதானவர்களுக்கு மிகவும் உகந்தது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக