புதன், 17 அக்டோபர், 2012

ஒரு எளிய உறக்கமுண்டாக்கி -ரிலாக்ஸ் tea

  • ஒரு எளிய உறக்கமுண்டாக்கி -ரிலாக்ஸ்  டீ                       

பத்து ரூபாயில் - ஒரு ஏர் கண்டிசனர் !

எண்ணெய் குளியலுக்கு மாற்றாக ,உடல் சூட்டை பராமரிப்பதற்கு வேறு வழியில்லையா ! என்று எண்ணும் -நண்பர்களுக்கு ,அமுத சுரபியாம் சித்த மருத்துவம் அளிக்கும் ஒரு யோகா மரபு மருத்துவ முறை ---------------------------------------------1.கடுக்காய் தோல்   2.நெல்லிவற்றல் 3.வெள்ளை மிளகு ,4.கஸ்தூரி மஞ்சள் 5.வேப்பம் கோட்டை -எல்லா உலர்ந்த கடை சரக்குகளையும் ,சரி சமமாக எடுத்துக் கொண்டு ,நன்கு அரைத்து ஒரு துணியில் ,வஸ்திர காயம் செய்து ,தேவைப்படும் அளவு ,கரிசாலை சாறு விட்டு அரைத்து ,ஒரு ரூபாய் நாணயம் அளவு ,வில்லைகளாக ,நிழலில் உலர்த்திக் கொள்ளவும் ,கண் எரிச்சல் ,நாட்பட்ட தோல் நோய்கள் உள்ளவர்கள் ,யோக சாதனை செய்பவர்கள் ,குழந்தைகள் உட்பட,எல்லோரும் குளிக்கலாம் ,குளிக்கும் நாள் அன்று ,காலையில் ஒரு வில்லையை ,ஒரு 50மில்லி பசும் பாலில் அரைத்து ,கொதிக்க வைத்து ,ஆற விட்டு ,தலை முதல் கால் வரை தேய்த்து ,வெந்நீரில் குளித்துப் பாருங்கள் ,உங்கள் உடல் குளிர்ந்து ,நாள் முழுவதும்  ,இனிமை எழும்