நத்தை சூரி என்ற குத்து செடியை தேடி பிடியுங்கள் ,கிராமங்களிலும்,வயல் பரப்பிலும் எளிதாக வளரும் ,ஒரு வறண்ட தாவரம் இது .அந்தி ,சந்தி வேளைகளில் அதன் வேரை ,மென்று சாற்றை விழுங்கவும் ,அல்லது கசாயமிட்டு குடிக்கவும் ,கண்கள் மிக கூர்மையாகும் ,எனக்கு நிறைய +++++என்பவர்களும் ,நான் 4-என்று தயங்குபவர்களுக்கும் ,ஒரு மண்டலத்தில் நிவர்த்தியை கொடுக்கக் கூடிய எளிய சித்த மருந்து இது ,வேரை மென்று விட்டு கைகளால் கண் விழியில் வைத்து அழுத்திப் பாருங்கள் ,கண்கள் கூசாது . கண்களில் மண் விழுந்தாலும் எறியாது . """""""படித்த சித்த மருத்துவர்களை அணுகுங்கள் -சிறப்பாக வாழுங்கள் """"""
திங்கள், 19 நவம்பர், 2012
சனி, 17 நவம்பர், 2012
நீங்கள் நோயாளியா !-ஒரு எளிய சோதனை மற்றும் ஒரு எளிய பயிற்சி
சகல மனிதர்களும்-தன் மரண நாளை நோக்கிய பயணத்தில் ,ஒருவரை ஒருவர் ,ஆஸ்திகளை சேர்ப்பதற்கான பந்தய திடலாகவே இந்த பூமியை பயன் படுத்திக் கொண்டிருக்கும் வேளையில் ........அந்த பூமித் தாயின் கருணையே ......சித்தத்தின் ருசி என்ற சுவை மிகுந்த உணவுகளையும் ......பந்தயத் திடல் ஓரமாக ,சமைத்து வைத்து விட்டு ......காத்திருக்கிறாள் தன் -"சோர்ந்த மனிதனை உயிர் ஊற்றுவதற்காக" .......நான் நோயாளி அல்ல ! என்று யாராவது சொல்ல முடியுமா !முடியும் என்கிறது என் தமிழ் மருத்துவம் . ...................................................................................................................................................................சற்று இந்த சித்த மருத்துவத்தின் கூற்றை கவனியுங்கள் - ....."வெள்ளி வெண்டிங்கள் விளங்கும் புதனிடம் ........"---------------------------------------"வெள்ளி புதனொடு திங்களிடமெனத் ,தள்ளுமின் கால சரம் "----(ஔவை குறள் ),அதென்ன ...கால சரம் ,வேறொன்றுமில்லை நம் சுவாசமே அவ்வாறு அழைக்கப் படுகிறது .இந்த சுவாசத்தை சற்று ஆழ்ந்து கவனியுங்களேன் -அது எப்போதும் இரு மூக்கு துவாரங்களில் ஓடுவதே இல்லை ,பொய் இல்லை என்று உணருவதற்கு ,உங்கள் வலது ஆள்காட்டி விரலை மூக்குத்துவாரத்தின் அருகே கொண்டு செல்லுங்கள் ,அப்போது புரியும் காற்று எதாவது ஒரு துவாரத்தில் அதிகமாக வெளிப் படுவதை ..........அதாவது இடது மூக்கில் அதிகமாக காற்று சென்று வருதல் நிகழ்ந்தால் ,அது இடகலை என்று பெயர் ,வலது மூக்கில் ஓடினால் அது பிங்கலை .அதனால் என்ன ?நீங்கள் கேட்பது புரிகிறது .நீங்கள் நோய் இல்லாத ஆரோக்யமனவர்கள் என்றால் ......மேலே உள்ள பாடல் வரிகள் உங்களுக்கு பொருந்தும் .அதாவது வெள்ளிக் கிழமை ,திங்கள் கிழமை ,புதன் கிழமை ஆகிய நாட்களில் ,உங்கள் மூச்சுக் காற்று ,அதிகாலை நான்கு மணி அளவில் ,அதாவது சூரியன் விழிக்கும் நேரம் என்று சொல்லப் படும் ,பிரம்ம வேளையில் ,இடது மூக்கு துளை வழியாக ஓட ஆரம்பிக்கும் ,இவ்வாறு ஐந்து நாழிகை (இரண்டு மணி நேரம் )ஓடியப் பின் ,அது வலது மூக்கு வழியாக தன் பயணத்தை தொடங்கும் ,இந்த ஆரம்ப தொடங்கல்தான் அன்றைய உங்கள் செயல்களை ,காலம் வழியாக செயல் படுத்த தொடங்குகிறது .அதே போல் -செவ்வாய் ,சனி ,ஞாயிற்று கிழமைகளில் ,அதி காலையில் வலது மூக்கு வழியாக தன் பயணத்தை தொடங்கி ,ஐந்து நாழிகை கழித்து ,இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை ,இரு மூக்கு துளைகள் வழியாகவும் -மாறி மாறி உள்ளும் ,வெளியும் பாய்கின்றன .குரு நாள் என்று சொல்லப் படும் வியாழன் அன்று மட்டும் -தேய் பிறை என்றால் வலதும் ,வளர் பிறை என்றால் இடத்தும் தன் பயணத்தை தொடங்குகின்றன ....சரி அதனால் என்ன ?இதை எப்படி கவனிப்பது ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------மிகவும் எளிது !இதை நீங்கள் கவனிப்பது ----எப்படி எனில் ,நாம் அனைவரும் தூங்க செல்கையில் ,நேரத்தை பார்கிறோமோ !இல்லையோ ! கண்டிப்பாக காலையில் கண் விழிக்கும் போது நேரத்தை கவனிப்பது பெரும் பாலும் நடப்பது இயல்பே !நீங்கள் எழும் போது உங்கள் சுவாசத்தை எவ்வாறு கவனிப்பது என்ற கவலையே வேண்டாம் !உங்கள் படுக்கை நிலையை கவனித்தாலே போதும் !--------------உடலின் இயற்பியல் அதிசயத்தை இங்கே நீங்கள் காணலாம் -அதாவதுகாலை கண் விழிக்கும் போது -வலப்புறம் திரும்பி படுத்திருந்தால் -மூச்சு இடது மூக்கில் ஓடும் ,இடப்புறம் திரும்பி படுக்கை நிலை இருந்தால் -மூச்சு வலப் புறமாக ஓடும் ,இதெல்லாம் சரி !-மல்லாந்து படுத்திருந்தால் ........அவன் ஞானி ,குப்புற படுத்திருந்தால் ...அவன் மோகி ,-இந்த படுக்கை நிலைகளை ,காலையில் எழுந்திருக்கும் போது மறந்திருந்தாலும் ,நினைவிற்கு கொண்டு வருவது மிக சுலபம் .கண்டிப்பாக நாளை காலை எல்லோரும் அலறுவீர்கள் !நான் நோயாளி என்று --------------------...............................................................................................................................................................................................................எல்லா நோயாளிகளுக்கும் ,அது எவ்வளவு பெரிய நோயாளியாக இருந்தாலும் ,புற்று நோயாளிகள் முதற்க் கொண்டு மரணத்தை அருகில் சென்று எதிர் கொள்ளும்நோயாளியாக இருக்கட்டும் ....அவர்களுக்கு எல்லாம் ,சித்தர்களின் ஒரு எளிய மருத்துவம் பாருங்கள் ...............காலையில் விழிக்கும் பொழுது ,பாடல்களில் சொல்லப் பட்ட நாட்காட்டிக்கு ஏற்ப ,ஒரு மண்டலம் உங்கள் சுவாசத்தை ஓட விட்டாலே ........உங்கள் உடல் செல்கள் நோய் நிலையிலிருந்து ,இயல்பான நிலைக்கு மாற ஆரம்பிக்கும் ,,,,,,,,,,,,,,,,எப்படி மாற்றுவது ? என்ற கேள்விக்கு மிக எளிய முதல்முறை-1. தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட கால அளவு உங்கள் காலை நேர படுக்கை நிலையை மாற்றுதல் -வலது ஓட வேண்டும் எனில் ,இடப் பக்கமாகவும் ,இடது ஓட வேண்டும் எனில் வலப் பக்கமாகவும் திரும்பி படுத்தலே ......................2.இரண்டாவது முறை -ஒலி அலைகளை குவித்து தாக்கும் கலையான ,மனதின் திடம் என்று அழைக்கப் படும் "மந்திரப் பிரயோகம் :இது அகத்தியர் முறை-"சிங் வங்"என்று அனாகததிலும் ,விசுத்தியிலும் -ஒலி அலைகளால் ஆனி அடித்தால் -சுவாசம் வலது ஓடும் ,"வங் சிங் "-என்று ஒலி ஆனி அடித்தால் இடது ஓடும் -இந்த ஆனி அடித்தல் ஒரு நாழிகை ,எண்ணத் தடையூறு இல்லாமல் ,நடை பெற வேண்டும் .3.சர மாறி தைலம் ,சர மாறி குளிகையும் உபயோகிக்கலாம் -மருந்திற்கு படித்த சித்த மருத்துவரை தொடர்பு கொள்வது நலம்
புதன், 17 அக்டோபர், 2012
பத்து ரூபாயில் - ஒரு ஏர் கண்டிசனர் !
எண்ணெய் குளியலுக்கு மாற்றாக ,உடல் சூட்டை பராமரிப்பதற்கு வேறு வழியில்லையா ! என்று எண்ணும் -நண்பர்களுக்கு ,அமுத சுரபியாம் சித்த மருத்துவம் அளிக்கும் ஒரு யோகா மரபு மருத்துவ முறை ---------------------------------------------1.கடுக்காய் தோல் 2.நெல்லிவற்றல் 3.வெள்ளை மிளகு ,4.கஸ்தூரி மஞ்சள் 5.வேப்பம் கோட்டை -எல்லா உலர்ந்த கடை சரக்குகளையும் ,சரி சமமாக எடுத்துக் கொண்டு ,நன்கு அரைத்து ஒரு துணியில் ,வஸ்திர காயம் செய்து ,தேவைப்படும் அளவு ,கரிசாலை சாறு விட்டு அரைத்து ,ஒரு ரூபாய் நாணயம் அளவு ,வில்லைகளாக ,நிழலில் உலர்த்திக் கொள்ளவும் ,கண் எரிச்சல் ,நாட்பட்ட தோல் நோய்கள் உள்ளவர்கள் ,யோக சாதனை செய்பவர்கள் ,குழந்தைகள் உட்பட,எல்லோரும் குளிக்கலாம் ,குளிக்கும் நாள் அன்று ,காலையில் ஒரு வில்லையை ,ஒரு 50மில்லி பசும் பாலில் அரைத்து ,கொதிக்க வைத்து ,ஆற விட்டு ,தலை முதல் கால் வரை தேய்த்து ,வெந்நீரில் குளித்துப் பாருங்கள் ,உங்கள் உடல் குளிர்ந்து ,நாள் முழுவதும் ,இனிமை எழும்
ஞாயிறு, 30 அக்டோபர், 2011
குரு வணக்கம்
ஆதி குரு -அகத்தியனுக்கும் ,ஸ்தூல குரு ஸ்ரீ பரஞ்சோதி சுவாமிகள் ,பதம் பணிந்து ,தமிழ் மருத்துவ மறை நோக்கி ,உரை பகிர முயல்கிறோம் .குரு உரை -வில்வ இலைகள் ஐந்து,குரு மிளகு ஐந்து ,-கலந்து அரைத்து,கசாயமிடு.வெறும் வயிற்றில் உண்ண,சுவாச காசம் (asthuma) அண்டாது .யோகமருத்துவத்தில் ,மூச்சு பயிற்சியில் ஏற்படும் ,சுவாச தடங்கலுக்கு மிக்க நல்லமருந்து .குளிர்கால சுவாச அடைப்பை உருவாக்கும் ,சளி ,இருமலுக்கு ,குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயமில்லாமல் பயன் படுத்தலாம் .
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)